இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால், உலகம் முழுவதும் இதுவரை 22000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விவரங்களை அறிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், இதில் 636 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 45 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், 16 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியளவில் இன்று ஒரு நாளில் மட்டும் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் தற்போது வரை 130 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து கேளரளாவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிக்கோபார் முதல் கொரோனா பாதிப்பை இன்று பதிவு செய்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
credit ns7.tv