புதன், 25 மார்ச், 2020

மாநகராட்சியின் நடவடிக்கை மன உளைச்சலை ஏற்படுத்துகிறது...! தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் வேதனை

மாநகராட்சி நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக வெளிநாடு சென்று திரும்பியவரின் குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வருவதால் வெளிநாடு சென்றுவருபவர்களை கண்காணித்து அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டிற்கு சென்று வந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்ததை குறிக்கும் வகையில் வீட்டின் வெளியே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளன.


அந்த ஸ்டிக்கரில் வைரஸ் தொற்று உள்ளது. உள்ளே நுழையாதே என்ற வாசகங்கள் அடங்கியிருப்பதால் அந்த வீட்டில் வசிக்கும் நபருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து சித்தரிக்கப்படுவதாக குடும்பத்தினர் வேதனை தெரிவிகின்றனர்.

முன்னெச்சரிக்கை பாதுகாப்பிற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளகூடிய ஒரு செயல்தான். சுய பாதுகாப்பிற்கும் அடுத்தவர்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து 14 நாட்கள் தனிமையில் இருப்பது மகிழ்ச்சி. ஆனால் கொரோனா தொற்று என்று ஒட்டியிருப்பது ஊர்மக்களை அச்சம்கொள்ளச் செய்யும் நிகழ்வாகவே இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
credit news 18 tamil nadu