புதன், 18 மார்ச், 2020

கொரோனா தாக்குதலுக்கு ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு!

சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானாவற்றில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் சமீப நாட்களில் அங்கு வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் காரணமாக உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 129 உயிரிழப்புகளும் புதிதாக 1,053 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்ததாக ஈரான் அறிவித்தது. 
இந்நிலையில் ஈரானில் இன்று மேலும் 135 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்திருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஈரானில் 988ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,991 ஆக அதிகரித்துள்ளது.
இதே போல கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள ஸ்பெயின் நாட்டில் புதிதாக 2,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்தது.
credit : ns7.tv