வியாழன், 19 மார்ச், 2020

இடைத்தேர்தலுக்கு பிறகே மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” - காங்கிரஸ்

Image
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், இவ்விஷயத்தில் சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். 
ராஜினாமா கடிதம் அளித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களின் ராஜினாமாவை ஏற்கும் முன்பாக அவர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்தில் தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தல் நடத்தி முடித்த பிறகே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, பெரும்பான்மையை இழந்துவிட்டதால் கமல்நாத் அரசு ஒருநாள் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது
credit ns7.tv