வியாழன், 26 மார்ச், 2020

உபதேசமெல்லாம் ஊருக்கு தானா முதல்வரே? ராமர் சிலையை வைக்க நல்ல நாள் பார்த்த யோகி... மத நிகழ்வுகள், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் ஒரு மாநில முதல்வரின் செயல்பாடு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமியில் ராம்லல்லா சிலைக்கான புதிய கோவிலை கட்டி, அங்கு சிலையை மாற்றியுள்ளது உ.பி. அரசு. உலகம் முழுவதும் கொரோனா அதிக தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் கோவில்கள் போன்ற மதம்சார்ந்த நிகழ்ச்சிகளில் கூட்டமாக யாரும் பங்கேற்க கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 21 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அயோத்தியின் ராமஜென்ம பூமியில் மிக பிரம்மாண்டமாய் எழுப்பப்படும் கோவிலுக்கு அருகே தற்காலிகமாக கோவில் ஒன்று எழுப்பப்பட்டு அதில் ராம்லல்லா சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார் உ.பி. முதல்வர் யோகி.
अयोध्या करती है आह्वान...

भव्य राम मंदिर के निर्माण का पहला चरण आज सम्पन्न हुआ, मर्यादा पुरुषोत्तम प्रभु श्री राम त्रिपाल से नए आसन पर विराजमान...

मानस भवन के पास एक अस्थायी ढांचे में 'रामलला' की मूर्ति को स्थानांतरित किया।

भव्य मंदिर के निर्माण हेतु ₹11 लाख का चेक भेंट किया।
View image on TwitterView image on TwitterView image on Twitter
இதைப் பற்றி 15.5ஆ பேர் பேசுகிறார்கள்
ராமர் கோவில் கட்டுவதற்காக, அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுவது தொடர்பாக அடிக்கடி இங்கு ஆலோசனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் முடிவில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ. 11 கோடிக்கான காசோலையை அந்த அறக்கட்டளைக்கு அளித்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். மத நிகழ்வுகள், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் ஒரு மாநில முதல்வரின் செயல்பாடு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி உ.பி.யில் 37 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.