சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை மையம் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் ட்விட்டரில், தமிழகத்தில் 5-வது கொரோனா பரிசோதனை மையம், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட, மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த பரிசோதனை மையமானது, உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் எனவும், அங்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும், எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில், 30 படுக்கை அறைகள் கொண்ட தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை, குறைக்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் மாநில எல்லை மூடப்படும், எனவும் தெரிவித்தார்.
credit ns7.tv