நள்ளிரவில் கேரள எல்லையில் தத்தளித்த 14 பெண்கள்... துரிதமாக மீட்ட பினராயி விஜயன்! பத்திரமாக வீடு சென்ற அந்த பெண்களில் ஒருவரான ஆதிரா ஷாஜி தன்னுடைய அனுபவம் குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Corona outbreak CM pinarayi vijayan rescues 14 women : தன் மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் அதிக அக்கறை செலுத்திவருகிறது கேரள அரசு. ஹைதராபாத்தில் வேலை பார்த்து வந்த 14 கேரள இளம் பெண்கள், லாக்டவுனைத் தொடர்ந்து ஒரு டெம்போ ட்ரைவர் உதவியை நாடி கோழிக்கோட்டில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். அவரும் சரி என்று கூறியிருந்தார். ஹைதாராபாத்தில் இருந்து டெம்போவில் கேரள எல்லை வரை பயணித்துள்ளனர். ஆனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பு வண்டியை ஓட்டிச் செல்வது ஆபத்தானது என்று அறிந்த அந்த ஓட்டுநர் 14 பெண்களையும், நள்ளிரவில் கேரள – கர்நாடக எல்லையில் இறக்கிவிட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.

ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்த அந்த பெண்கள், கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கே போன் செய்துள்ளனர். அதிகாலை 2 மணிக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பினராயி விஜயன் அவர்களின் அழைப்பை எடுத்து பேசியுள்ளார்.
அந்த பெண்கள் தங்களின் நிலையை விளக்கி கூறியுள்ளனர். அப்பெண்களின் நிலையையும் பாதுகாப்பற்ற நிலையையும் உணர்ந்த பினராயி விஜயன் அப்பகுதி ஆட்சியிர் மற்றும் எஸ்.பி. ஆகியோரிடம் தொடர்பு கொண்டு நடந்த விபரங்களை கூறி அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். உடனடியாக அந்த பெண்களை அழைத்து செல்ல ஏற்பாடுகள் ஆனது. பத்திரமாக வீடு சென்ற அந்த பெண்களில் ஒருவரான ஆதிரா ஷாஜி தன்னுடைய அனுபவம் குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.