திங்கள், 30 மார்ச், 2020

பிரதமர் கூறியதை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தோல்விதான் - அரவிந்த் கெஜ்ரிவால்

நேற்று டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியிருந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் பேசியபோது..
➤ ஊரடங்கை பிரதமர் அறிவித்தபோது எங்கு உள்ளீர்களோ அங்கேயே இருங்கள் என்று கூறினார்
➤ இதுவே ஊரடங்கிற்கான மந்திரம் என கருதுகிறேன்
➤ இதனை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு வெற்றிபெறாது, கொரோனாவிற்கு எதிரான நாட்டின் போராட்டம் தோல்வியை தழுவும்
➤ பல்வேறு நகரங்களில் வேலைபார்த்து வரும் பெரியளவிலான எண்ணிக்கையிலானவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர், அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்
➤ நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டமாக சேர்ந்திருப்பதை பார்த்தேன், இவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் நீங்களும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். உங்களுடைய சொந்த வாழ்க்கையையும், குடும்பத்தையும் பற்றி சிந்தித்து பாருங்கள்
➤ ஒவ்வொரு நாளும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு டெல்லி அரசு உணவு வழங்கி வருகிறது
➤ கூடுமானவரை அனைவருக்கும் உணவு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது
➤ டெல்லியில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை என்று பேச்சுக்கே இடமில்லை
➤ வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வாடகை கேட்டு தொந்தரவு அளிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களிடம் கோருகிறேன், யாராவது வாடகை தர இயலாத சூழல் ஏற்பட்டால், அந்த வாடகையை அரசே செலுத்தும்
➤ நீங்கள் இதுவரை பணம் சேர்த்திருந்தால், அதனை பயன்படுத்த சரியான தருணம் இது!
➤ ஊரடங்கில் மீதம் உள்ள 18 நாட்களில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை படியுங்கள், அதை தான் குடும்ப வாழ்க்கையில் நாம் சந்திக்கிறோம்

டெல்லியில் கொரோனாவால் இதுவரை 49 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
credti ns7tv

Related Posts: