கொரோனா தொற்று பரவலை தடுக்க போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறக்கூடாது என எச்சரித்த போலீசாரை நீண்ட கத்தியை காண்பித்து மிரட்டிய பெண் சாமியார்.
உத்தரப் பிரதேச மாநிலம், தியோரா மாவட்டத்தில் மா ஆதி சக்தி என்ற பெயருடன் பெண் ஒருவர் வலம் வருகிறார். இவர் சாமியார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பக்தர்களுக்கு மத போதனைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் பீகாரைச் சேர்ந்த 100-க்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் மா ஆதி சக்தியின் ஆசிரமத்திற்கு விரைந்து சென்று ஊரடங்கு உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றமென எச்சரித்துள்ளனர். மேலும் மக்கள் கூட்டம் கூடக்கூடாது எனவும், இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினரின் எச்சரிக்கையை கடுகளவும் மதிக்காத அந்த பெண் சாமியார் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். என் ஆசிரமத்தில் கூட்டம் போட்டால், உனக்கென்ன வந்தது" என்று போலீசாரிடம் எகிறிய அவர், ஒரு கட்டத்தில் கையில் வாளுடன் வந்து, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
முடிந்த வரை பொறுமை காத்த காவலர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் சாமியார் மா ஆதி சக்தியை தரதரவென்று இழுத்து சென்று கைது செய்தனர்.
இதனை தடுக்க முயன்ற அவரது பக்தர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இந்த பெண் சாமியார் உத்தரப் பிரதேசம் தாண்டி வட இந்தியா முழுவதும் தனது சர்ச்சை பேச்சுகளால் பிரபலமானவர் என்பது குறிப்பிட தக்கது.
இதனை தடுக்க முயன்ற அவரது பக்தர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இந்த பெண் சாமியார் உத்தரப் பிரதேசம் தாண்டி வட இந்தியா முழுவதும் தனது சர்ச்சை பேச்சுகளால் பிரபலமானவர் என்பது குறிப்பிட தக்கது.
credit ns7.tv