திங்கள், 23 மார்ச், 2020

ஈரோடு முடக்கப்பட்டது ஏன்? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸகர் தெரிவித்துள்ளார். 
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து திரும்பிய 64 வயது மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மூதாட்டி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதவதாக தெரிவித்துள்ளார். மேலும், துபாய் நாட்டில் இருந்து திரும்பிய 43 வயதான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்ரில் பதிவிட்டுள்ளார். 
ஈரோடு மாவட்டத்தை முடக்கி வெளியான செய்திக்கு பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பினர். அதற்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.  
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் வெளிநாடுகளிலில் இருந்து வந்தவர்களே என்றும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாடு சென்று திரும்பியவர்கள், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 
credit ns7.tv