புதன், 1 ஏப்ரல், 2020

ஸ்பெயினில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு? March 31, 2020

Credit NS7.tv
Image
ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் உள்ளது. இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில் தான் அதிகபட்சமாக சுமார் 8200 உயிரிழப்புகள் நடந்துள்ளன.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஸ்பெயினில் 94 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று நிலவரப்படி ஸ்பெயினில் புதிதாக கொரோனா பாதிப்பு 7,846 ஆக இருந்த நிலையில், இன்று அது 6,461 ஆக குறைந்துள்ளது.
சமீப நாட்களாக ஸ்பெயினில் புதிதாக கொரோனா பாதிப்படைவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 20% அளவுக்கு இருந்ததாகவும் அது தற்போது 8 - 11 % அளவிற்கு மட்டுமே இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஸ்பெயினில் நாடு தழுவிய ஊரடங்கு இன்று 18வது நாளை எட்டியுள்ள நிலையில், தினமும் 50,000 பேருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவத்துறையினர் கூறினர்.
ஸ்பெயினில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக மேட்ரிட் உள்ளது. அங்கு மட்டும் 3,609 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் 27,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.