ஞாயிறு, 14 ஜூன், 2020

#BlackLivesMatter போராட்டங்களால் போர்க்கோலம் பூண்டது லண்டன் நகரம்!

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பினர் காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவத்தால் கொதித்தெழுந்த லட்சக்கணக்கானவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர். இந்த போராட்டம் மெல்ல மெல்ல ஆக்ரோஷமாக மாறத்தொடங்கி வன்முறை வெறியாட்டங்களாக மாறின. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தவதோடு காலணிய ஆதிக்கத்தின் அடிமைத்தனத்தினை நினைவுகூரும் நினைவு நின்னங்களையும், சிற்பங்களையும் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் தகர்த்து வருகின்றனர்.

இந்த போராட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகள் உட்பட பிற நாடுகளுக்கும் பரவி உள்ளன. இங்கிலாந்திலும் இந்த போராட்டம் தற்போது சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன. லண்டனில் நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் சாலைகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர்.


போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடியிலும் காவல்துறையினர் நடத்தினர். லண்டனில் உள்ள காலணிய ஆதிக்க சின்னங்களை சேதப்படுத்தும் எண்ணத்துடன் போராக்காரர்கள் நடந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

லண்டனில் உள்ள Trafalgar சதுக்கத்தில் #BlackLivesMatter போராட்டக்காரர்களும், அவர்களுக்கு எதிரானவர்கள் திரண்டதால் அங்கு போர்க்கோலம் பூண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


வன்முறை வெறியாட்டங்களுக்கு இங்கு வேலை கிடையாது, மீறி ஈடுபட்டால் காவல்துறையின் மூலம் ஒடுக்கப்படுவார்கள் என பிரிட்டர் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதனிடயே போராட்டக்காரர்களிடமிருந்து நினைவு சின்னங்களை பாதுகாக்க அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லத்தொடங்கியுள்ளனர் காவல்துறையினர்.

Related Posts: