தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
#CoronaVirus தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்றும் பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.