கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் நிசார்கா சூறாவளி புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் கரையை கடக்கிறது.
தற்போதைய நிலவரப்படி கோவாவின் பஞ்ஜீம்க்கு வடமேற்கே 280 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் சூரத்க்கு தென்மேற்கே 560 கிலோ மீட்டர் தொலைவில், மும்பைக்கு தென்மேற்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 13 கிலோ மீட்டர் தொலைவில் நகரும் இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல் ஆக வலுப்பெறும்.
மகாராஷ்டிராவின் வடக்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இந்த புயலின் தாக்கம் இருக்கும். தற்போதைய நிலவரப்படி வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள ஹரிகேஸ்வர் பகுதிகளுக்கு இடையே நாளை நண்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மகாராஷ்டிராவின் வடக்கு மாவட்டங்கள் குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மின் கம்பங்கள், கூரை வீடுகள், வாழை,பப்பாளி மற்றும் பயிர்கள் இப்புயலால் அதிக சேதமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி மைய வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Everyone pls take care.
Location - Bhavnagar ( Gujarat) #NisargaCyclone #Nisarga #coronavirus #Cyclone #MumbaiRain #Nisarga #StayHomeStaySafe #StaySafeStayHealthy