புதன், 3 ஜூன், 2020

"ரெம்டெசிவர்" மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!

கொரோனா சிகிச்சைக்கு "ரெம்டெசிவர்" மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் பல்வேறு மருந்துகள் கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவர் மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கான சிகிச்சையின்போது ரெம்டெசிவர் மூலம் நல்ல பலன் கிடைத்ததையடுத்து இந்த மருந்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. 

 

கொரோனா அவசர சிகிச்சையின்போது நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 55 முறை வரை இம்மருந்தினை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்த மருந்தினை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.