வியாழன், 11 ஜூன், 2020

ஹைதராபாத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல் - கொரானாவுக்கு பலியானவரின் உறவினர்கள் அட்டகாசம்

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் காந்தி பொது மருத்துவமனை, கொரோனா நோய் சிகிச்சைக்கான  பிரத்தியோக மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், கொரோனா தொற்று காரணமாக 55 வயது நிரம்பிய ஒருவர்  பலியானதையடுத்து, மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இளநிலை மருத்துவர்களை தாக்கப்பட்தனர். இதன் காரணமாக, நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில்  மருத்துவர்கள் தர்ணா போராட்தத்தைத் தொடங்கினர். இந்த போராட்டம்  இன்று அதிகாலை மூன்று மணி வரை நீட்டித்தது. இன்று, காலை 8 மணிக்கு மீண்டும் ஆரம்பித்த இந்த போராட்டம் அடுத்த கட்ட நிலைக்கு செல்ல உள்ளது.

நோயாளிக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததாகவும்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடைசி இரண்டு நாட்ககளும் அவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,” நோயாளி Non-Invasive வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். இளநிலை மருத்துவர்கள் குணமடைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதை நோயாளியின் உறவினர்களுக்கு தெளிவாக விளக்கினர். படுக்கையை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கையும் நோயாளிக்கு கொடுக்கப்பட்டது. இருப்பினும்,  நோயாளி கழிப்பறைக்கு அருகே மயங்கி கிடந்தது  கண்டறியப்பட்டது.சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

 

 

“கடந்த இரண்டு நாட்களாக நோயாளி தீவிர கண்காணிப்பில் இருந்தார். படுக்கையில் இருந்தாவாறே, சிபிஏபி இயந்திரம் மூலம் சுவாசிக்க அறிவுறுத்தப்பட்டது. மருத்துவ ஆலோசனையை பெரிது படுத்தாமல் தானாக கழிப்பறையை நோக்கி நடந்தார். இதனால், மூச்சுக் கோளாறு  ஏற்பட்டு அந்த இடத்திலேயே நோயாளி சரிந்து இறந்தார். உறவினர்களின் இருவர் பாதுகாப்பு வளையங்களைத்  தாண்டி மருத்துவமனைக்குள் நுழைந்து, எங்களை ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கினார்கள், ”என்று இளநிலை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

நோயாளிகளின் உதவியாளர்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், மருத்துவமனைக்குள் அவர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் தான் உள்ளனர். காவல்துறை கண்காணிப்பில் சிறந்த பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று மாநில அரசின் முந்தைய உத்தரவாதம் எவையும் பலனளிக்கவில்லை.  தாக்குதல் நடத்திய உறவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.  இந்த மருத்துவமனையின் அனைத்து தளங்களிலும் குறிப்பாக  ஒவ்வொரு அவசர சிகிச்சை பிரிவிலும், சிறப்பு பாதுகாப்பு படையை உடனடியாக நிறுவ வேண்டும்,”என்று தெலுங்கானா இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

கோவிட் -19 நோயாளியின் உறவினர்களால் இளநிலை  மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்த மருத்துவமனையில் ஏற்கனவே நடந்தேறியுள்ளது. உரிய, பாதுகாப்பு கோரி இவர்கள் ஏற்கனவே போராட்டத்தை மேற்கொண்டனர். கடந்த முறை, நடந்த போராட்டத்தின் போது, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ​​தெலுங்கானா மாநில சிறப்பு காவல்துறையை நிறுத்துவதாக  மாநில அரசு  உறுதியளித்தது.

வடக்கு மண்டல துணை ஆணையர் கல்மேஷ்வர் ஷிங்கேநவர், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுடன் பேசுகையில்,    எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடும் இல்லை, நோயாளியின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்டதால் உறவினர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். அவரைப் பொறுத்தவரை, மருத்துவர்களின் காயங்களுக்கு காரணம் உடல்ரீதியான தாக்குதல் அல்ல என்று தான் கருதுவாதாகவும் தெரிவித்தார்.

இறந்தவரின் உறவினர்கள் இருவர் மீது ஐபிசி, 1897 வருட தொற்றுநோய் பரவல் தடை சட்டப் பிரிவு 3, 2008 வருட தெலுங்கானா மருத்துவர் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை, இழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம்) சட்டப் பிரிவு 4  ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுகிறார்கள் என்று துணை ஆணையர் தெரிவித்தார்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு    சிகிச்சையளிக்கப்படும் பிரதான வார்டுக்குள் எந்த உறவினரும் அனுமதிக்கப்படுவதில்லை. தீவிர மூச்சுத் திணறல் உடல் நலக் குறைபாடு (சாரி) இன்புளூயன்ஸா போன்ற உடல்நலக் குறைபாடு (ஐஎல்ஐ) போன்ற நோய்களுக்கான கேஷுவல்டி கட்டத்தின் மூன்றாவது மாடியில் உள்ள கோவிட் தீவிர மருத்துவ பராமரிப்பு பிரிவில் (ஏ.எம்.சி.யு) கேள்விக்குரிய நோயாளி இறந்தார். இந்த கட்டிடத்தில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறை பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் யாரும் எதிரபாராத தருணத்தில் நடந்தது”என்று துணை ஆணையர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த 15-20 நிமிடங்கள் கழித்தே காவல்துறை தலியிட்டதாக  தலையிட்டதாக இளநிலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 65 நோயாளிகளுக்கு மேல் உள்ளதால், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இறந்தவர் ஹைதராபாத்தில் உள்ள கார்வன் எனும் பகுதியை சேர்ந்தவர். ஜூன் 6 ஆம் தேதி தனது மனைவி மற்றும் மகனுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கானா இளநிலை மருத்துவர்கள் டாக்டர்கள் சங்கம் இன்று உயர் பிரதிநிதிகளிடம் தங்கள் கோரிக்கைகளை அதிகாரப்பூர்வ  சமர்ப்பிக்க உள்ளனர்.