திங்கள், 15 ஜூன், 2020

வீடுகளில் இதைச் செய்யுங்க... கொரோனாவை விரட்டலாம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு நாளும் 1000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா மொத்த எண்ணிக்கையில் 70%-க்கும் அதிகமானவர்கள் சென்னை மக்கள் தான். மக்கள் நெருக்கமாக உள்ள காரணத்தால் தான் அங்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை பெருநகர மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வீட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோ, அல்லது அறிகுறி இருப்பவர்களோ இருந்தால், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற விபரத்தை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அவைகள் பின்வருமாறு…

* 20 நொடிகள் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவவும்.

* குறிப்பாக, இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு

* உணவு சமைப்பதற்கு முன்பும், பின்பும், சமைக்கும் போதும்.

* கழிவறைக்கு சென்று வந்த பின்

* தொற்று நோயாளியை கவனிக்கும் முன்பும் பின்பும்

* கைகள் அழுக்காக இருக்கும் போதெல்லாம்…

* தொற்று ஏற்பட்டுள்ள நபரை அடிக்கடி சந்திப்பதை தவிர்க்கவும். பாத்திரங்கள், சாப்பாடு, பானங்கள், டவல் உள்ளிட்டவைகளை பகிர்ந்துக் கொள்ள கூடாது.

* இருமும் போதும், தும்மும் போதும் கை முட்டியை பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தி, அதை உடனே குப்பைத் தொட்டியில் போட்டு விடவும்.

* வீட்டிலிருக்கும் அனைவரையும் கண்காணித்துக் கொள்ளவும். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.

Related Posts: