வியாழன், 11 ஜூன், 2020
Home »
» கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை! தமிழகத்தில் ?
கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை! தமிழகத்தில் ?
By Muckanamalaipatti 11:43 AM
ஐந்தாவது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வியை புகுத்தக் கூடாது என்று கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இருப்பினும், உயர்நிலை மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கர்நாடாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், எஸ்.சுரேஷ் குமார் இதுகுறித்து தெரிவிக்கையில், “எல்.கே.ஜி, யுகேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடத்தப்படாது. வகுப்பறையில் நேரில் சென்று பயிலும் அனுபவத்திற்கு மாற்றாக இத்தகைய இணைய வழிக் கல்விகள் அமையாது. பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் வரை, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கடடணம் வசூலிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஆறு வயது உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புள் சரியான களமாக அமையாது என்று மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் ( NIMHANS ) வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவித்தது.
12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு : முடிவுகள் வெளியாவது எப்போது?
தினமும் மணிகணக்கில் இணைய வழி கல்வி நிர்பந்திக்கப்பட்டால் மாணவர்களின் மன நலன் பெரிதும் பாதிக்கக்கூடும் ”என்று நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்ன? கொரோனா பொது முடக்கநிலையால் தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை பார்த்தால் மீண்டும் பள்ளிகள் எப்போது தொடங்கும்? என்பதை கணிப்பது கூட சிரமாக உள்ளது.
அதுபோன்று, இந்த ஊரடங்கால் ஏற்பட்ட வகுப்பு நேர இழப்பை ஈடுசெய்ய புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும், தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான பள்ளிகள் இணைய வழிக் கல்வியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.ஆன்லைன் வகுப்பிலும் பள்ளிச் சீருடைகள் அணிய மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும், வகுப்பு நேரங்கள் ஒழுங்கற்ற முறையில் இருப்பதாகவும், பெற்றோர்களுக்கு அதிக பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாகவும் பெற்றோர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இதுகுறித்து மூத்த கல்வியியலாளர் ஒருவர் தெரிவிக்கையில், ” தமிகழத்தில் மாணவர்களுக்கு எடுக்கப்படும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த அரசின் முடிவுகள் தெளிவானதாக இருக்க வேண்டும். தற்போது, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வரையறைகளை, ஒவ்வொருபள்ளிகளும் தாங்களாகவே வகுத்துக் கொள்கின்றன. தமிழக அரசு இதை நெறிமுறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் வழி கல்வி பெற முடியாத மாணவர்களின் நிலை என்ன? அவர்களை எப்படி முதன்மைப்படுத்துவது? வகுப்பறை நேரம் என்ன? ஆறு வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி தேவையா? போன்ற கேள்விகளை அரசு நெறிமுறைகளில் தெளிவுப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே, கேரளாவில் ஆன்லைன் வழிக் கல்வி பெற முடியாதால் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அதுபோன்ற, சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்கு அரசு தனது நடவடிக்கைகளை துரிதபடுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள மூடப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.