வெள்ளி, 14 மே, 2021

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம்!

 இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் 10 கிலோ மீட்டர் வரை பயணிக்க 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். 10 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 50 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொள்ளலாம் .

சாதாரண ஆம்புலன்சுகளில் 10 கிலோ மீட்டர் வரை செல்ல 1,500 ரூபாய் வரையும் அதற்கு மேல் செல்ல ஒவ்வொரு கிலோமீட்டக்கும் தலா ரூ. 25 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸில் 10 கிலோ மீட்டர் வரை 4 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டக்கும் தலா 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.