வெள்ளி, 5 நவம்பர், 2021

ஸ்ரீநகர்- சார்ஜா வான்வழி அனுமதி

 ஸ்ரீநகர்-ஷார்ஜா பகுதிகளில் அக்டோபர் 23, 24, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விமானங்களை இயக்க கோ ஃபர்ஸ்ட் (GoFirst) விமானங்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் வான்வழியைப் பயன்படுத்த அனுமதி வழங்கியதாக வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அதே விமானத்திற்கான அனுமதியை “அக்டோபர் 31 2021 முதல் நவம்பர் 30 வரை நிறுத்தி வைத்துள்ளது” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

“இந்த விவகாரம் உடனடியாக பாகிஸ்தானுடன் இராஜதந்திர வழிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழித்தடத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பொது மக்களின் பெரிய நலனுக்காக இந்த விமானத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கோ ஃபர்ஸ்ட்டின் (Go First) புதிய ஸ்ரீநகர் – ஷார்ஜா விமானம் தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. பட்ஜெட் விமான வழியை மாற்றியமைத்து அதன் பறக்கும் நேரத்திற்கு 40 நிமிடங்களைச் சேர்க்கும்படி கட்டாயப்படுத்தியதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டு 10 நாட்கள் ஆன பிறகு, பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லாவால் ‘மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று வர்ணிக்கப்பட்டது. அதே நேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முப்தி, சேவையைத் தொடங்குவதற்கு முன் “எந்த அடிப்படை வேலைகளையும்” செய்யவில்லை என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டினார்.

இந்த விமானம் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்து, லாகூர் வழியாக பறந்து, அந்நாட்டின் தென்மேற்கே சென்று, ஷார்ஜாவில் தரையிறங்குவதற்கு முன்பு ஈரானிய வான்வெளியில் நுழைந்து சேவை நேரத்தை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துகொள்ளும்.

இந்த விமானம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகரில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று, ஓமன் வான்வெளி வழியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைவதற்கு மேற்கு நோக்கிச் செல்வதற்கு முன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மீது பறந்தது. இதன் விளைவாக, விமானத்தின் காலம் 4 மணி 20 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

விமான கண்காணிப்பு போர்ட்டலான ஃப்ளைட் ராடார் 24-ல் ருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்தியாவில் இருந்து மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு செல்லும் பிற விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தொடர்ந்து பயன்படுத்துகின்றன.

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் (Go First) முன்பு (GoAir) என்று அழைக்கப்பட்டது. அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தி இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவிற்கு ஐந்து விமானங்களை இயக்கியது.

2009ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான முதல் விமான இணைப்பு இதுவாகும். ஸ்ரீநகர் மற்றும் துபாய் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை மோசமான தேவை காரணமாக சில மாதங்களில் நிறுத்தப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

ஸ்ரீநகர்-ஷார்ஜா விமான சேவை தொடங்கப்படுவதை அறிவித்தபோது, ​​கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுசிக் கோனா ஒரு அறிக்கையில் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைக்கும் முதல் விமான நிறுவனம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், இது பிராந்தியத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு சாட்சியமளிக்கிறது. இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா, இருதரப்பு பரிமாற்றத்தில் இந்த இணைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 2019-ல் பாலகோட் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. இந்திய மற்றும் வெளிநாட்டு விமானங்களை நீண்ட வழிகளில் செல்ல கட்டாயப்படுத்தியது. இது விமானப் பயண நேரத்தை 70-90 நிமிடங்கள் நீட்டித்தது. வான்வெளி கட்டுப்பாடுகள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தன. இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் மட்டும் ரூ.550 கோடி கூடுதலாக செலவழித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/india-raises-issue-of-overflight-clearance-for-srinagar-sharjah-flight-with-pakistan-364901/

Related Posts: