காக்ரோச் ஜனதா பார்ட்டி நிறுவனர் அபிஜீத் திப்கே நேற்று ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட வெற்றிகரமான GenZ போராட்டத்தில் வைரலான எழுப்பிய கேள்வி மிகவும் முக்கியமானது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாட்டின் உண்மையான பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இந்து - முஸ்லிம் பிரிவினை அரசியல் , மதவெறி அரசியல் , அதிகாரவெறி அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.
மதவெறி உணர்வுகளைத் தூண்டி மக்களைப் பிரிப்பதால் வேலைவாய்ப்பு உருவாகுமா? விவசாயிகளின் பிரச்சினைகள் தீருமா? விலைவாசி குறையுமா? பொருளாதாரம் வளருமா?
ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பதிலாக எந்த மாநிலத்தை எப்படிக் கைப்பற்றலாம், எந்த எதிர்க்கட்சியை எப்படி உடைக்கலாம், யாரை வாங்கலாம், யாரை மிரட்டலாம், எந்த தேர்தலில் என்ன தந்திரம் செய்யலாம் என்ற அரசியல் கணக்குகளிலேயே காலத்தை செலவிட்டால் அந்த நாட்டின் முன்னேற்றம் எங்கே இருந்து வரும்?
வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது. விலைவாசி உயர்கிறது. கல்வியும் சுகாதாரமும் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகிறது. ஆனால் இவற்றைப் பற்றி பேசாமல் மதம், வெறுப்பு, பிரிவினை ஆகியவற்றையே அரசியலின் மையமாக மாற்றினால் அதனால் பயனடைவது சில அரசியல்வாதிகளும் , மாபியாக்களுமே தவிர மக்கள் அல்ல.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கலாச்சாரம் ஜனநாயகத்திற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது. மக்கள் மத அடையாளங்களைத் தாண்டி வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமூக நீதி போன்ற அடிப்படை கேள்விகளை முன்வைக்கத் தொடங்கினால்தான் அரசியலின் திசையும் நாட்டின் எதிர்காலமும் மாறும்.
ஒரு நாட்டை முன்னேற்றுவது வெறுப்பு அரசியல் அல்ல; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நிர்வாகம்தான்.
மேலும் CJP மிக முக்கியமான கோரிக்கை மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா
நீட் 2026 வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள், சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் தேர்வு நிர்வாகத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு குளறுபடிகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தும் குரல்கள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன.
மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான தேர்வுகளில் இப்படி தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கும்போது, பொறுப்பை அதிகாரிகள் மீது மட்டும் தள்ளிவிட்டு அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்காமல் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மிக வலுவாக ஓங்கி எழுப்பப்பட்டுள்ளது , எதிர்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்
CJP Movement இன்னும் வீரியமாக மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து நம் இந்திய சட்டத்திற்குட்பட்டு மக்களை திரட்டி நாட்டின் நலன்களின் கவனம் செலுத்தி நல்லது நடக்க முன் வரட்டும் என்கிற மக்கள் எண்ணங்கள் வெற்றி பெறட்டும்…
source fb page https://www.facebook.com/photo/?fbid=27569805802656358&set=a.780525752011060
- தக்கலை கவுஸ் முஹம்மத்
07.06.2026





