சனி, 27 ஜூன், 2026

விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட நிர்வாகி

 

TVK Person னளைஅ

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து பாசிட்டீவ் மற்றும் நெகடீவ் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் நிர்வாகிகள் சிலர் பொதுமக்களை மிரட்டி பணம் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்களை கட்சியில் இருந்து நீக்கி வரும் த.வெ.க, தற்போது மேலும் ஒரு நிர்வாகியை நீக்கியுள்ளது. 

கடந்த 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று கூட்டணி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி குறித்து பாசிட்டீவ் விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் அவ்வப்போது நெகடீவ் விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக த.வெ.க தலைவர் விஜய் முதல்வர் ஆகிவிட்டார் என்று சொல்லி, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். 

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் உடனடியாக பதிவிடப்பட்டு எதிர்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வரும்போது அந்த நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்படுவது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய கடலூர் தெற்கு மாவட்ட த.வெ.க இணை செயலர் புலவேந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

tvk le

கடலூர் தெற்கு மாவட்டத்தில் த.வெ.க இணை செயலாளராக இருந்த புலவேந்திரன், விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு, ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கண்டமங்கலம் ஏரியில் எடுக்க அரசின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் மண் எடுக்க பணம் தர வேண்டும் என்று சொல்லி த.வெ.க இணை செயலாளர் புலவேந்திரன் விவசாயிகளிடம் மிரட்டியுள்ளார். 

இது குறித்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது புலவேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புலவேந்திரன் நீக்கப்படுவதாக த.வெ.க மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-tvk-cuddalore-co-secretary-expulsion-from-the-party-12110691