ஞாயிறு, 21 ஜூன், 2026

ஈரானை மீண்டும் வம்பிழுத்த டிரம்ப்; சைடில் அடி வாங்கிய ஒபாமா

 


obama

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் போர் நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரான் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் ராணுவ ரீதியாக முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எங்களது நிர்வாகம் ஈரான் மீது கடுமையான அணுகுமுறையைக் கையாள்வதற்கு முன்பு வரை, பல தசாப்தங்களாக ஈரான் எவ்வித தண்டனையுமின்றி தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ஒபாமாவை விமர்சித்த டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஈரானை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தவறிவிட்டார் என்றும், அந்த நாட்டிற்கு பில்லியன் கணக்கான டாலர்களைப் பணமாக அள்ளிக் கொடுத்தார் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது "நான் அதிகாரத்திற்கு வரும் வரை, கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் 'கொலை' குற்றங்களில் இருந்து கூட  தப்பித்து வந்தது. ஆனால், நான் வந்த பிறகு அனைத்தும் மாறிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், "ஒபாமா அவர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களைப் பணமாகத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். உலகின் நம்பர் ஒன் பயங்கரவாத ஆதரவு நாடான ஈரானைக் கட்டுப்படுத்த, செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு, அப்போதைய நமது ராணுவத்தை அவர் பயன்படுத்தவே இல்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/international/trump-says-iran-got-away-with-murder-before-his-presidency-as-he-slams-obama-12057666