செவ்வாய், 9 ஜூன், 2026

விஜிலென்ஸ்': அறப்போர் புகார்

 

stalin

அ.தி.மு.க ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் தி.மு.க அரசு மோசடி செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "முன்னாள் அ.தி.மு.க அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்

2013-ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட சி.எம்.டி..ஏ-விடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது. 2015 -16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள முத்தம்மாள் நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் பாரத் கோல் கெமிக்கல் நிறுவனத்திடம் இருந்து கடனாக  27.9 கோடி கொடுக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2016-ல் சி.எம்.டி.ஏ கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது. 2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் மூலம் திருச்சியில் 24.2 கோடியில்  4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார்.  இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. 

இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் தி.மு.க அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024-ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.  2025-ம் ஆண்டில் இந்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் தி.மு.க அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது.

2026-ம் ஆண்டில் தான் தி.மு.க அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைகிறார். தி.மு.க அரசு அவருக்கு எதிராக பதிந்த எஃப்.ஐ.ஆர் அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . 

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புதிய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது. அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை  மூடக்கூடாது என்று வாதிடும்" என்று குறிப்பிட்டுள்ளது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-government-accused-of-fraud-in-vaithilingam-case-arappor-iyakkam-allegation-12016615