வெள்ளி, 20 நவம்பர், 2015

கப்று வணக்கம்


++++++++++++
யாமறிந்த பித் அத்திலே
இந்த பித் அத் போல்
இழிதாக எங்கும் காணோம்
பாமரத் தனமாக
பலரையும் கூட்டி வைத்து
சாமியைப் போன்று
சாய்ந்து கிடக்கும் கபுறுடைய
பூமியில் விழுகிறார்
புலம்பிப் பாடுகிறார்.
உள்ளே உள்ளவரு
உண்மையில் நல்லவரா
உள்ளத்தை அறிந்தவன்
ஓரிறைவன் மட்டுமே
இல்லாத வழியொன்றை
இஸ்லாத்தில் புகுத்தி
அல்லாஹ்வின் மார்கத்தை
அவமானப் படுத்துகிறார்
எல்லா மொழிகளிலும்
இறைஞ்சுகிறார் கபுறடியில்
உள்ளே உள்ளவர்
உயிரோடு இருக்கையிலே
ஒரு மொழிதான் அறிந்திருந்தார்
உசிரு போனபின்னால்
டியூசன் போனாரா
டிக்‌ஷனறி பார்த்தாரா
எல்லோரும் பேசுவதை
எப்படி அறிகின்றார்.
குறுக்கால சிந்திப்போர்
கூட்டம் சேர்ப்பதற்கும்
சுறுக்காக உழைப்பதற்கும்
சோடித்த வழியாகும்.
சிர்க்கை உண்டாக்கும்
இறையருளை துண்டாக்கும்
இருக்கும் ஈமானை
இல்லாமல் அழித்து விடும்.
(Mohamed Nizous)
Madawala News's photo.