செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

எரிவாயு மானியம் ரத்து செய்யும் முடிவுக்கு வைகோ கடும் கண்டனம்! August 01, 2017

எரிவாயு மானியம் ரத்து செய்யும் முடிவுக்கு வைகோ கடும் கண்டனம்!


சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவது பொதுவிநியோகத் திட்டத்தை முடக்கும் சதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்வதாலும், எரிவாயு விலை ஏற்றத்தாலும் கோடிக்கணக்கான சாதாரண எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பங்கீட்டுக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்கள் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது, பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்கும் செயல் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் வழக்கம் போல் பொதுவிநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக உணவு அமைச்சர் தெரிவித்து இருப்பது நம்ப முடியாது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.