வியாழன், 2 ஜூலை, 2020

சிபிசிஐடி அலுவலகத்தில் கைரேகை பதிவு!


கயத்தாறு அருகே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடார்ந்து, அதிகாலையில் எஸ் ஐ பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேரும் கைது  செய்யப்பட்டனர்.

ஏற்கனவே நேற்று இரவு எஸ் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட நான்கு பேர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர். பின்பு சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தற்போது தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 4 பேருக்கு கைரேகை பதிவு நடைப்பெற்று வருகிறது. 


எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசுக்கு நன்றி என சிபிசிஐடி ஐஜி  சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய காவல் அதிகாரிகளான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரகுகணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 

Related Posts:

  • நபிகள் நாயகத்துக்கு சூனியம்...? சூனியம் என்று பொருள் படும் ஸிஹ்ர் என்ற சொல் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் தெளிவான முடிவுக்கு வந்து வ… Read More
  • மோடியை விட தரம் தாழ்ந்த ஏக இறைவனின் திருப்பெயரால்.... இஸ்லாத்தில் இடஒதுக்கீடு என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதில் ஷம்சுதீன் காஸிமி குத்பா… Read More
  • முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு ச… Read More
  • “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்; குண்டு வீசி கொல்ல வேண்டும்; வெடிகுண்டு கிடைக்காவிட்டால் நாங்களே வெடி குண்டு தருகின்றோம்; அல்லது வெடிகுண்டுகளை தய… Read More
  • Money rate Top 10 Currencies   By popularity                  … Read More