நீட் பிரச்னையை முன்னிறுத்தி சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், நீட் தேர்வில் தமிழகத்தை வஞ்சித்துள்ள மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இதில் அனைத்துக்கட்சி தொண்டர்களும், மாணவர்களும் பொதுமக்களும் பங்குகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.