மதவாத சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு சேலம் மாவட்ட நெறியாளர் தாமரைச்செல்வன் தலைமையில், மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வி.சி.க-வினர் கலந்துகொண்டனர். வி.சி.க-வின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க. மத்திய மாவட்டச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேல் மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பாரதி, ’நேரு எங்களைப் பார்த்து பயப்பட்டதாக மோடி கூறுகிறார். பி.ஜே.பி., 1980ல் உருவாகியது. ஆனால், நேரு 1964-ம் ஆண்டே மரணம் அடைந்து விட்டார். மோடி தவறான தகவலைக் கூறுகிறார். நாங்கள் பகத்சிங்கின் வாரிசுகள் ஒடுக்கப்பட்ட, தலித் மக்களை உயிரை கொடுத்தாவது பாதுகாப்போம்’ என்றார்.

அடுத்து மைக் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேல், 'மோடியையோ, பி.ஜே.பி.,யோ விமர்சித்து பேசினால் தேசத் துரோகிகள் என்ற பட்டத்தை பி.ஜே.பி-யினர் கொடுக்கிறார்கள். தேசத்தை இவர்கள் குத்தகைக்கு எடுத்ததைப் போல சொல்கிறார்கள். திருமாவளவனையும், அவருடைய கட்சிக்காரர்களையும் கட்டபஞ்சாயத்து செய்யக்கூடியவர்கள் என்கிறார் தமிழிசை. கட்டப்பஞ்சாயத்தால் ஒருவரைக் கொன்று, அந்த பழியை மாற்று மதத்தினர் மீது போடும் இயல்புடையவர்கள் நீங்கள்’ என்றார்.
source: Vikatan.com
http://www.vikatan.com/news/tamilnadu/106753-vck-organises-protest-against-bjp-in-salehtml