சரக்கு சேவை வரியை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது ஒரு திட்டத்தை எப்படிச் செயல்படுத்தக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மறைமுக வரிகளிலேயே சரக்கு சேவை வரி சிறந்தது என்றால் ஏன் அதைப் பல நாடுகள் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பணக்காரர் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும், ஏழை மக்களே வங்கிகளில் வரிசையில் நின்று உயிரைவிட்டதாகவும் யஸ்வந்த் சின்கா தெரிவித்தார்.