கே.ஆர்.பி அணையில் மதகு உடைந்த இடத்தில் பொதுப் பணித்துறையின் உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அணையின் முழுக் கொள்ளளவான 52 அடியில் 46 அடி நீர் உள்ளதால் உடைந்த மதகை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர். அணையில் தற்பொழுது உள்ள 51 அடி நீர், 31 அடியாக குறைந்தால் மட்டுமே மதகை சரி செய்ய முடியும் என்பதால், அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து சென்ற பொதுப்பணித்துறையின் தலைமை செயற்பொறியாளர் முருக சுப்பிரமணியன் தலைமையிலான 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் கே.ஆர்.பி.அணையினை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.