நியூஸ் 7 தமிழ், குமுதம் இணைந்து நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பில் எம்.ஜி.ஆர் விட்டு சென்ற வெற்றிடத்தை அரசியலில் நிரப்ப போகும் நடிகர் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்கள் வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட வாரியாகவும், இளைஞர்கள், படித்தவர்கள், சிறுபான்மையின மக்கள் என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஒட்டுமொத்த கருத்து கணிப்பில் ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவருமே அடுத்த எம்.ஜி.ஆர். இல்லை என 56 சதவீதத்துக்கும் மேலானோர் தெரிவித்துள்ளனர். இதில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விமர்சித்து வரும் கமல்ஹாசன், அடுத்த எம்ஜிஆராக இருக்கலாம் என 16 சதவீத பேர் மட்டுமே கூறியுள்ளனர். அதே போல் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றுள்ள ரஜினிகாந்த், அடுத்த எம்.ஜி.ஆர். என சுமார் 15 சதிவீதம் பேர் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். ரஜினி வரிசையில் அடுத்து மாஸ் ஹீரோ என்று சொல்லப்படும் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். என 12 சதவீதம் பேர் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் பிறந்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களிடம் கேட்டபோது அவர்களில் 52 சதவீதத்துக்கும் மேலானோர் ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரில் எவருமே அடுத்த எம்ஜிஆர் இல்லை என பதிலளித்துள்ளனர். அதே சமயத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர அரசியலை பார்த்த 30 முதல் 50 வயதுக்குட்பட்டோரில் 60 சதவீதத்துக்கும் மேலானோர் இந்த மூவரும் அடுத்து எம்.ஜி.ஆர். இல்லை என கூறியுள்ளனர். மேலும் எம்.ஜி.ஆரின் சினிமா அரசியல் என இரண்டு பரிணாமங்களையும் பார்த்த 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62 சதவீதத்துக்கும் மேலானோர் இந்த மூன்று உச்சநட்சத்திரங்களும் அடுத்த எம்.ஜி.ஆராக முடியாது என தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஆண்களில் 57 சதவீதத்துக்கும் மேலானோர் அடுத்த எம்.ஜி.ஆராக ரஜினி, கமல், விஜய்யை பார்க்க முடியவில்லை என கூறியிருக்கிறார்கள். பெண்களில் 55 சதவீதத்துக்கும் மேலானோர் மூன்று நடிகர்களுமே அடுத்த எம்.ஜி.ஆர். இல்லை என தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 34 சதவீதம் பேர் அடுத்த எம்.ஜி.ஆராக நடிகர் ரஜினியை பார்ப்பதாக கூறியுள்ளனர்.
பள்ளி வரை மட்டுமே படித்தவர்கள் மற்றும் இளநிலை முடித்தவர்களில் தலா 56 சதவீதம் பேரும் முதுநிலை அளவிற்கு படித்தவர்களில் 59 சதவீதம் பேரும் ரஜினி கமல் விஜய் ஆகியோரில் அடுத்த எம்ஜிஆர் எவருமில்லை என பதிலளித்துள்ளனர்.
அதே போல் மத வாரியாக நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 62 சதவீதத்துக்கும் மேலான இஸ்லாமியர்கள், மூன்று நடிகர்களில் யாருமே அடுத்த எம்.ஜி.ஆராக முடியாது என கூறியுள்ளனர். அதே போல் இந்துக்களிலும் கிறித்துவர்களிலும் தலா 56 சதவீதம் பேர் ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவருமே அடுத்த எம்.ஜி.ஆர். இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.