
2018ம் ஆண்டு முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் அவசர உதவி பட்டன், ஜிபிஎஸ் வசதியுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு புதிய விதிகளை உருவாக்கி கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய தொலைதொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஆண்டு முதல் அனைத்து வகையான மொபைல் போனிலும் ஆபத்து காலத்தில் உதவும் வகையில், ஜிபிஎஸ் வசதியுடன் அவசர உதவி பட்டன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, அவசர சூழ்நிலைகளில், செல்போன் மூலம் போலீசாரை பெண்கள் எளிதாக தொடர்பு கொண்டு உதவியை நாடும் வசதியை ஏற்படுத்தி தர உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் அவசர உதவி பட்டன் ஜிபிஎஸ் வசதியுடன் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.