
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய பகுதிகளில், ரஜினி, கமல், விஜய் ஆகிய மூன்று பேரில் யார் கட்சி தொடங்கினாலும் அதிகபட்சமாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக இருப்பார்கள் என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இதில் அதிகப்பட்சமாக 36.4% பேர் மு.க. ஸ்டாலினுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 26% பேரும், மூவரும் சவாலாக இருப்பார்கள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் டிடிவி தினகரனுக்கு 5.1% பேரும், விஜயகாந்த்துக்கு 7.3% பேரும், அன்புமணி ராமதாஸ்க்கு 4% பேரும், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 4.6% பேரும், சீமானுக்கு 8.6% பேரும், மூவரும் சவாலாக இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் என்பதற்கு 8 சதவிதம் பேர், மூவரும் சவாலாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.