புதன், 22 நவம்பர், 2017

உபெர் வாடிக்கையாளர்கள் 5.70 கோடி பேரின் கணக்குகளுக்குள் நுழைந்த ஹேக்கர்கள்! November 22, 2017

Image

உபேர் நிறுவனத்தின் இணைய தளத்தில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு 2016ம் ஆண்டு 60 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

உபேர் நிறுவனம் கைப்பேசி செயலி மூலம் உலகம் முழுவதும் வாடகை வாகனங்களை இயக்கிவருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் வலைதளத்துக்குள் அத்துமீறி நுழைந்த சட்டவிரோத கும்பல் ஒன்று அங்கிருந்த தகவல்களை அழித்து விடுவதாக பயமுறுத்தியதாக கூறப்படுகிறது. இப்படி, உபேர் நிறுவனத்தில் கணக்கு வைத்திருந்த சுமார் 5 கோடியே 70 லட்சம் பேரின் கணக்குகளுக்குள் அந்த சட்டவிரோத கும்பல் நுழைந்தது.

இதற்கு அந்நிறுவனத்தில் பணியாற்றிய இரு பணியாளர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கருதிய உபேர் நிறுவனம் அவர்களைப் பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில், அத்து மீறி வலைதளத்துக்குள் நுழைந்தவர்களுக்கு 60 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் கொடுத்து உபேர் நிறுவனம் பிரச்சினையைச் சரிசெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.