சிவகங்கை மவட்டத்தில் செல்போனுக்காக சிறுவனை கடத்திய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை பாரதிநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிச்சைமணி. இவரது மனைவி புவனேஸ்வரி, தனது 12 வயது மகன் முத்துப்பாண்டிக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக, சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், ஆதார் அட்டை எடுப்பதற்காக உதவி செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், ஆதார் அட்டைக்கான சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுத்து தருவதாகக் கூறிய அந்த நபர், துணைக்கு முத்துப் பாண்டியையும் அழைத்துச் சென்றுள்ளார். அனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த புவனேஷ்வரி, தனது மகனை காணவில்லை எனக் கூறி அழுதுள்ளார்.
அப்போது அங்கு நின்ற பொதுமக்கள், முத்துப்பாண்டியை தேடி சென்றபோது, அவன் பேருந்துநிலையம் அருகே நின்றுகொண்டிருந்தான். பின்னர் சிறுவனிடம் விசாரித்தபோது, கடத்திசென்ற மர்ம நபர் தன்னிடம் இருந்த செல்போனை பறித்துகொண்டு, பேருந்து நிலையம் அருகே விட்டுச் சென்றதாக கூறியுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனை கடத்தி, செல்போனை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.