வெள்ளி, 24 நவம்பர், 2017

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நீலகிரியில் தீவிர பாதுகாப்பு! November 24, 2017

Image

தமிழகம் - கேரளா - கர்நாடக எல்லையில் மாவோயிஸ்ட்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி, தொரப்பள்ளி, பாட்டவயல், கெத்தை உள்பட 13 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளபட்டு வருகிறது. 

கடந்தாண்டு நவம்பர் 24-ந்தேதி  கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் தங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் மீது கேரளா காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், அந்த இயக்கத்தை சார்ந்த 3 பேர் கொல்லபட்டனர். 

இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு ஆவதால் அதற்கு பழிவாங்கும் வகையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

இதனையடுத்து தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில எல்லைகளில் காவல் துறையினர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.