திங்கள், 27 நவம்பர், 2017

ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது November 27, 2017

Image

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் மற்றும் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்தனர்.  

வேட்புமனுக்கள் பெறப்படும் மண்டல அலுவலகத்தைச் சுற்றி, 100 மற்றும் 200 மீட்டர் தொலைவுகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மண்டல அலுவலகத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை, வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய டிசம்பர் 4-ஆம் தேதி கடைசிநாளாகும். அதன் பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, டிசம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.  

இதனிடையே, வரும் 29ஆம் தேதி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

Related Posts: