ஒடிசா மாநிலம் தாக்கூரு முண்டா பகுதியில் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவிகளை தனது வயலில் வேலைக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தக்ருமுண்டாவில் செயல்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் அங்கு பயின்று வரும் 3 மாணவிகளை தனது வயலில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார்.
வயல் வேலைக்கு செல்ல மாணவிகள் மறுத்ததால் அவர்களை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த 3 மாணவிகளையும் கட்டாயப்படுத்தி, வயல் வேலைக்கு அவர் அனுப்பியுள்ளார்.
இதற்காக, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் 3 நாட்களுக்கு தலா 300 ரூபாய் ஊதியத்தையும் ஆசிரியை அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரை ஏற்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.