உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த முஸ்லிம் பெண்களின் புர்க்காவைக் காவல்துறையினர் அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ஏராளமான முஸ்லிம் பெண்களும் வந்திருந்தனர். அப்போது புர்க்கா அணிந்திருந்த பெண்களிடம் காவல்துறையினர், புர்க்காவை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஒருசில பெண்கள் புர்க்காவை அகற்றாத நிலையில் காவலர்களே அவர்களின் புர்க்காவை அகற்றினர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.