வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயார்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் வெளி விவகார அமைப்பு ஒன்று இது குறித்த அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. 12 பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளானது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் அதிகார வட்டத்திற்குள் வரும் சில பிரதேசங்கள் எனவும் தெரிய வந்துள்ளது. வடகொரியா இலக்காக குறிவைத்துள்ள பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகள் மிகுந்த பகுதியாக இருப்பதால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெளியான பட்டியலின் அடிப்படையில் அமெரிக்காவின் முக்கிய பகுதிகள் அனைத்தும் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகன் சிறப்பு கவனத்தை பெறுகின்றது. இதுபோலவே ஜப்பான் நகரங்கள் பவற்றில் மக்கள் தொகை மிகுந்த பகுதியாகும்.