நியூஸ் - 7 தமிழில், மக்கள் மனசுல யாரு ? கருத்துக் கணிப்பில், விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் அளித்த பதில்கள்
நடிகர் விஜய், திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் விஜய் வெற்றி வாய்ப்பு என 7 சதவீதம் பேரும், காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு என 6 சதவீதம் பேரும், இதர கட்சிகளுடன் என 24 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
18 வயதில் இருந்து 30 வயதுடையோர், திமுகவுடன் கூட்டணி வைத்தால், விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என 35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக 25 சதவீதம் பேரும், பாஜகவுக்கு ஆதரவாக 7 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். காங்கிரசுடனான கூட்டணிக்கு 5 சதவீதம் பேரும், இதர கட்சிகளுடனான கூட்டணிக்கு 25 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
50 வயதுக்கு மேற்பட்டோரில், 42 சதவீதம் பேர், திமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக 22 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஆண்களில், 41 சதவீதம் பேரும், பெண்களில் 35 சதவீதம் பேரும் விஜய் திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு என ஆண்களில் 20 சதவீதம் பேரும், பெண்களில் 27 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கல்வி தகுதி அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மாணவர்களில் 39 சதவீதம் பேர், திமுகவுடன் கூட்டணி வைத்தால், விஜய்க்கு வெற்றி வாய்ப்பு என தெரிவித்துள்ளனர். இளநிலை பட்டதாரிகளில் 38 சதவீதம் பேரும், முதுநிலை பட்டதாரிகளில் 37 சதவீதம் பேரும் விஜய் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதே நேரத்தில், விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மாணவர்களில் 24 சதவீதம் பேரும், இளநிலை பட்டதாரிகளில் 21 சதவீதம் பேரும், முதுநிலை பட்டதாரிகளில் 17 சதவீதம் பேரும் பதிவிட்டுள்ளனர்.
யாருடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு, மத அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்துக்களில் 38 சதவீதம் பேரும், முஸ்லீம்களில் 45 சதவீதம் பேரும், கிறித்துவர்களில் 40 சதவீதம் பேரும் திமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்துக்களில் 23 சதவீதம் பேரும், முஸ்லீம்களில் 18 சதவீதம் பேரும், கிறித்துவர்களில் 23 சதவீதம் பேரும் என விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி என கூறியுள்ளனர்.