அரசின் பல்வேறு சமூகத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆதாருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பது தொடர்பான மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகி, ஆதார் எண்கள் இணைக்க காலக்கெடுவை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, அரசியல் சாசன அமர்வு அமைப்பது தொடர்பான மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.