ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அரசியல் சாசனம் அமைப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் எப்போது அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு, ஆதார் தொடர்பான மனுக்கள் விசாரிக்கப்படும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று முறையிட்டார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி அரசியல் சாசனம் அமைப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.