ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அதானி சோலார் மின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.
இராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே செங்கப்படையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான சூரிய ஒளி மின்திட்ட பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மின்வாரியம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இரவு 11 மணியளவில் அந்த சூரிய ஒளி பூங்காவின் கட்டுப்பாட்டு அறையில் அதிக அழுத்தம் கொண்ட மின் வயர்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென கட்டுப்பாட்டு அறை முழுவதும் பரவியது.
இந்த தீ விபத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 3 பேர் என 4 பொறியாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களுக்கு உதவச் சென்ற 3 பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.