புதன், 29 நவம்பர், 2017

​முட்டை சைவமா? அசைவமா? - ருசிகர ஆய்வு முடிவு! November 28, 2017

Image

சின்ன வயதிலிருந்தே நம்மை சில கேள்விகள் துரத்தி வரும். அதில் பல கேள்விகள் ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா?, இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?’ என்கிற ரகமாகத்தான் இருக்கும்.

அப்படி ஒரு சுவாரசியமான கேள்வி தான் முட்டை சைவமா? அசைவமா? என்பது. சைவ சாப்பாட்டைத் தவிர வேறு எதையுமே சாப்பிடமாட்டோம் எனச் சொல்லும் அதிதீவிர சைவர்கள் கூட, முட்டை பிரியர்கள் ஆக இருப்பார். ஆனால், முட்டை சைவமா, அசைவமா என குழப்பத்தில் ஒருவேளை அசைவம் சாப்பிடுகிறோமோ என லேசான குற்றவுணர்ச்சி இருக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்காகவே சூப்பர் தகவலை சொல்லியிருக்கிறார்கள். ஆய்வின் அடிப்படையில் முட்டை என்பது சைவ உணவுதான் என நிறுவப்பட்டிருக்கிறது. முட்டை என்பது கரு, வெள்ளைக்கரு, முட்டை ஓடு ஆகியவற்றால் ஆனது. இவற்றில் இருப்பது எல்லாமே புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் தான். முட்டைக்கரு, வெள்ளைக்கரு எதிலுமே வளர்ச்சி அடைந்த ஒரு உயிரின் கரு இருப்பதில்லை. முட்டையிடப்பட்டு ஒரு உயிராக வளர்ச்சி அடைவதற்கான காலத்திற்கு முன்பாகவே நாம் அதை சாப்பிட்டு விடுகிறோம்.

மேலும், 6 மாத வளர்ச்சியை அடைந்துவிட்ட ஒரு கோழி ஒன்றிலிருந்து - ஒன்றரை நாட்கள் இடைவெளியில் முட்டையிடும் ஆற்றலோடு இருக்கிறது. இந்த முட்டைகள் எல்லாமே சேவல் கோழியினால் கருவுற்று இடப்படும் முட்டை இல்லை. இவை, கருவுறா முட்டைகள். எனவே, நாம் கடைகளில் வாங்கிச்சாப்பிடும் முட்டைகள் சைவம் தான் உறுதி செய்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே, முட்டை அசைவமா என்ற குழப்பத்தை தவிர்த்து வேளைக்கு ஒரு ஆம்ப்லெட், ஆஃபாயில், அவித்த முட்டை என அசத்துங்கள்!