வெள்ளி, 24 நவம்பர், 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் முழுவிவரம் November 24, 2017

Image

ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 21ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த சென்னை ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மீண்டும் நடத்தப்படுவது எப்போது என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வந்த நிலையில் இன்று தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, 

➤வேட்பு மனு தாக்கல் வரும் 27ந்தேதி தொடங்குகிறது
➤வேட்பு மனுதாக்கல் செய்ய டிசம்பர் 4ந்தேதி கடைசி நாளாகும் 
➤டிசம்பர் 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்
➤வேட்பு மனுக்களை திரும்பப் பெற டிசம்பர் 7ந்தேதி கடைசி நாளாகும்
➤வாக்குப்பதிவு டிசம்பர் 21ந்தேதி நடைபெற உள்ளது. 
➤டிசம்பர் 24ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 31ந்தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடுவிதித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என  தேர்தல் ஆணையம் நேற்று தனது உத்தரவை வழங்கியது. இந்த உத்தரவு வந்த மறுநாளே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.