சிறையில் சலுகைகள் அளிக்க சசிகலாவிடம் அதிகாரிகள் 2 கோடி ரூபாய் பெற்றது உண்மை என டிஐஜி ரூபா மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊடகங்கள் மூலம்தான் சிறைத்துறை முன்னாள் ஏடிஜிபி சத்யநாராயணா வழக்கு தொடர்ந்ததை தெரிந்து கொண்டேன் எனவும், ஆனால், தனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
எனினும், தன் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என குறிப்பிட்ட ரூபா, சத்யநாராயணாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நடிகர் கமல்ஹாசனை சந்தித்தபோது, தமிழகத்திற்கு நல்லது செய்துள்ளதாக அவர் பாராட்டியதாக ரூபா தெரிவித்துள்ளார்.