சனி, 9 டிசம்பர், 2017

உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம்



ராஜஸ்தானில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் முதியவர்:

- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!!
இப்படிப்பட்ட கேடுகெட்ட நாட்டிலா நாம் வாழ்கிறோம் என்ற கேள்வியை ஒவ்வொரு இந்தியனும் கேட்டுக் கொள்ளும் படு கேவலமான செயல் ஒன்று பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில மீண்டும் அரங்கேறி இருக்கிறது.
சம்புலால் என்ற சங்பரிவாரக் கொடியவன் அஃப்ரசுல் கான் என்ற 50 வயது முதியவர் ஒருவரை துடிக்க துடிக்க கோடாரியால் வெட்டி சித்திரவதை செய்துவிட்டு, குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அவரை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தி கொன்றுவிட்டு, அதை வீடியோ பதிவாகவும் உலவவிட்டது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட அந்த முஸ்லிம் முதியவர் லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டதால் கொன்றதாக அவன் கொக்கரித்து இருக்கிறான்.
சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் கொலை செய்த கொடியவனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருந்ததில்லை என்றும், கொல்லப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினர்களோ வேற்று மதத்தவர்களை மணமுடிக்கவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த வீடியோ பரவாமல் இருப்பதற்குத்தான் மாநிலஅரசு அதிக கவனம் எடுத்துக் கொண்டதே தவிர, குற்றவாளியை ஆற அமர யோசித்தே பெயரளவிற்கு கைது செய்திருக்கிறது. அவனும் நாளையே வெளியே வந்து இதுமாதிரியான கொடுஞ்செயலைத் தொடர்வான். இதுதான் இந்த நாட்டின் நிலை.
இப்படிப்பட்ட கேடுகெட்ட கயவர்களுக்கா வாக்களித்தோம் என்று நடுநிலை இந்துக்களே வெட்கித்தலைகுனியும் நிலையை பாஜக தலைமையிலான அரசு ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தானது இந்தக் கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
சம்பந்தப்பட்ட குற்றவாளி பொது இடத்தில் வைத்து தூக்கிலேற்றிக் கொல்லப்படுவதே சரியான நீதியாகும் என்பதையும் கூறிக் கொள்கிறது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ். சையது இப்ராஹீம்

Related Posts: