
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நோக்கி பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் படையெடுத்து வருகின்றன.
தற்போது காஷ்மீரில் குளிர்கால சீசன் களைக்கட்ட தொடங்கி உள்ளதால் ரஷ்யா, செர்பியா மற்றும் ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பல்வேறு இனப் பறவைகள், தால் ஏரி உட்பட நீர்நிலைகளை நோக்கி, அலையாக அலையாக வருகின்றன.
காஷ்மீரில் நிலவும் சீதோஷனம் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த பறவைகளும் லட்சக்கணக்கில் காஷ்மீரில் தஞ்சம் அடைந்துள்ளன. நடப்பாண்டில் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வருவதால் காஷ்மீரில் சுற்றுலாத்துறை மேம்படும் என வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.